ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

October 11, 2022

தொடரும் கனமழை காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நேற்று, மற்றும் நேற்று முன்தினம் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒக்கேனக்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது தற்போதைய நிலவரப்படி 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. […]

தொடரும் கனமழை காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நேற்று, மற்றும் நேற்று முன்தினம் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒக்கேனக்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது தற்போதைய நிலவரப்படி 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசில் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கவும், குறைவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu