ஜொமாட்டோ தளத்தை பயன்படுத்துவதற்கான பிளாட்பார்ம் கட்டணம் 25% உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜொமாட்டோ தளத்தின் மூலம் உணவு ஆர்டர் செய்வதற்கு 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு சனிக்கிழமை முதல் 5 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, டெலிவரி கட்டணம், வாடிக்கையாளர் கட்டணம் போன்றவை வசூலிக்கப்பட்டு வரும் சூழலில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜொமாட்டோ நிறுவனத்தின் லாபம் உயரும் என கருதப்படுகிறது. ஸ்விக்கி தளத்தில் டெலிவரி கட்டணம் 5 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, ஜொமாட்டோ நிறுவனமும் டெலிவரி கட்டணத்தை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஜொமாட்டோ கோல்ட் சந்தாதாரர்களுக்கும் இந்த கட்டண உயர்வில் எந்த சலுகையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.














