அதிகரித்த வர்த்தக பற்றாக்குறை… இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து வெளியான அதிர்ச்சி அறிக்கை!

July 16, 2025

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை பெரிதளவில் உயர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளிவந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார சீர்நிலைக்கு சவாலாக அமைந்துள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஜப்பான், தென் கொரியா, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பலருடன் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது தனது ஏழு முக்கிய வர்த்தக கூட்டாளர்களில் ஐந்துடன் இழப்பை சந்திக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இதன் பங்கு 37% ஆகும் […]

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை பெரிதளவில் உயர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளிவந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார சீர்நிலைக்கு சவாலாக அமைந்துள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஜப்பான், தென் கொரியா, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பலருடன் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது தனது ஏழு முக்கிய வர்த்தக கூட்டாளர்களில் ஐந்துடன் இழப்பை சந்திக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இதன் பங்கு 37% ஆகும் என அறிக்கையில் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளுடனான பற்றாக்குறை 2019 ஆம் ஆண்டில் 21.8 பில்லியன் டாலரில் இருந்து 2025 ஆம் ஆண்டில் 45.2 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை, இந்தியாவின் நாணய மதிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu