புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா

November 1, 2022

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ல் விடுதலை பெற்றது. அதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ல் விடுதலை நாள் கொண்டாப்படுகிறது. இந்தாண்டிற்கான விடுதலை நாள் விழா இன்று புதுச்சேரி காந்தி திடலில் நடக்கிறது. காலை 8:55 மணி முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின் , காவல்துறையினர், முன்னாள் ராணுவ […]

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ல் விடுதலை பெற்றது. அதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ல் விடுதலை நாள் கொண்டாப்படுகிறது. இந்தாண்டிற்கான விடுதலை நாள் விழா இன்று புதுச்சேரி காந்தி திடலில் நடக்கிறது.

காலை 8:55 மணி முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின் , காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு விடுதலை நாள் உரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu