2022 ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1.85 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதி

January 10, 2023

2022 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18% உயர்ந்து, 1.85 லட்சம் டன்களாக உள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. காமன்வெல்த் சுதந்திர நாடுகள் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள், இந்தியத் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்து, முதலிடம் பிடித்துள்ளன. குறிப்பாக, இந்த கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா மட்டுமே 0.32 லட்சம் டன் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. மேலும், சி ஐ எஸ் கூட்டமைப்பு மொத்தமாக, 0.43 லட்சம் […]

2022 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18% உயர்ந்து, 1.85 லட்சம் டன்களாக உள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் சுதந்திர நாடுகள் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள், இந்தியத் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்து, முதலிடம் பிடித்துள்ளன. குறிப்பாக, இந்த கூட்டமைப்பில் உள்ள ரஷ்யா மட்டுமே 0.32 லட்சம் டன் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. மேலும், சி ஐ எஸ் கூட்டமைப்பு மொத்தமாக, 0.43 லட்சம் டன் தேயிலை இறக்குமதியும், ஐக்கிய அரபு அமீரகம் .0.32 லட்சம் டன் தேயிலை இறக்குமதியும், ஈரான் 0.19 லட்சம் டன் தேயிலை இறக்குமதியும் செய்து, முறையே 1, 2 மற்றும் 3ம் இடங்களைப் பிடித்துள்ளன. இவைத் தவிர, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 0.08 லட்சம் டன் மற்றும் 0.1 லட்சம் டன் தேயிலையை இறக்குமதி செய்துள்ளன. இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் மூலம் 2022ஆம் ஆண்டில் 5371 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu