ரஷிய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம் - வாக்களிக்க மறுத்த இந்தியா

July 12, 2024

உக்ரைன் போரை நிறுத்தி ரஷ்ய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க மறுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 99 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக ஒன்பது நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்தனர். உக்ரைன் போருக்கு நடுவில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கம் காட்டுவது மேற்கத்திய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டாம் தேதி ரஷ்ய இராணுவம் நடத்திய […]

உக்ரைன் போரை நிறுத்தி ரஷ்ய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க மறுத்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு 99 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக ஒன்பது நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்தனர். உக்ரைன் போருக்கு நடுவில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கம் காட்டுவது மேற்கத்திய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த எட்டாம் தேதி ரஷ்ய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 49 பேர் பலியாகினர். கீவ் நகரில் உள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது. மோடியின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளது. மோடியின் ரஷ்ய பயணம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu