இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பிக்கள் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து 56 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றதில் 41 எம்பிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா மாவட்டங்களில் போட்டி நிலவியதால் தேர்தல் நடத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்திற்கு பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பல பரிட்சை நடத்தியது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மொத்தமாக வாக்களித்தால் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நிலையில் எம்எல்ஏக்கள் மாற்றி வாக்கு அளித்ததால் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதனை அடுத்து உத்திரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஏழு இடங்களிலும், சமாஜ்வாடிக்கு மூன்று இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில் பாரதிய ஜனதா 8 வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது.