இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தியா கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிச் செயலாளர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுவையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த பாஜக கட்சி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. தற்போது அங்கு காங்கிரஸ் உறுப்பினர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்ததற்காக இந்திய கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அங்கு பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றி மக்கள் நலனுக்காக இந்தியா கூட்டணி பணியாற்றும் என்றும் புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது