இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி தடை உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதியை மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்வதாக கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று, இலங்கைக்கு 10000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்கனவே 24000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், கூடுதலாக 10000 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அமீரகம் தவிர வங்கதேசத்துக்கு 50000 டன் வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை தவிர, இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.