2023 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3% அளவிற்கு கீழ் குறையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார். மேலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அதிக பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
“கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்ய போர் காரணமாக உலக பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த ஆண்டும் அதன் பாதிப்புகள் நீளும். மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறைவாகவே இருக்கும். மேலும், 2023 ஆம் ஆண்டை பொறுத்தவரை உலகப் பொருளாதார வளர்ச்சியில் பாதி பங்கை இந்தியாவும் சீனாவும் மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், வளர்ந்த நாடுகளில் 90% நாடுகளின் பொருளாதார சரிவடையும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.