பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பாஸ்மதி அரிசி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக அரிசி வாங்க அலைமோதி வருகின்றனர். அரிசியின் விலை 22 டாலரில் இருந்து 47 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா உலக அளவில் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்து வருகின்றது. தடை விதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.