வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை

August 12, 2025

இந்தியா–வங்கதேச உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, சணல் பொருட்கள் சாலை மற்றும் ரெயில் வழியாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு துறைமுகம் வழியாக அந்த இறக்குமதி தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் மந்தமான சூழ்நிலையில், வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை சாலை மற்றும் ரெயில் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பில், நவா ஷேவா துறைமுகம் வழியாக […]

இந்தியா–வங்கதேச உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, சணல் பொருட்கள் சாலை மற்றும் ரெயில் வழியாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு துறைமுகம் வழியாக அந்த இறக்குமதி தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் மந்தமான சூழ்நிலையில், வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை சாலை மற்றும் ரெயில் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பில், நவா ஷேவா துறைமுகம் வழியாக மட்டும் சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மே 17 அன்று, வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கும் இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu