டி20 கிரிக்கெட் தொடரில் நான்காவது ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் ஆரம்பிக்க
6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை சேர்த்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய வங்கதேச அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆனார்கள். இதனால் வங்கதேச அணி ஆட்டத்தின் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது