ப்ரோ ஹாக்கி லீக் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 9 அணிகளுக்கு இடையில் ஆன ஐந்தாவது புரோ ஹாக்கி தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் இரு கோல்களை அடித்தது. இதனை அடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மூன்றாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என கோல் அடித்து முன்னிலை பெற்றது. நான்காவது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.