அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு 2ம் இடம்

April 22, 2024

அமெரிக்க குடியுரிமை பெற்று அந்நாட்டில் குடியேறும் வெளிநாட்டினர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் மெக்சிகோ உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்தம் 46 மில்லியன் வெளிநாட்டினர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இது மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 14% ஆகும். மேலும், அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர்களில் 53% அதாவது 24.5 மில்லியன் பேர் அமெரிக்க குடிமகன்களாக உரிமை பெற்றுள்ளனர். நேச்சுரலைஸ்ட் சிட்டிசன் எனப்படும் உரிமையை பெற்று அமெரிக்க குடிமகன்களாக மாறி உள்ளனர். […]

அமெரிக்க குடியுரிமை பெற்று அந்நாட்டில் குடியேறும் வெளிநாட்டினர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் மெக்சிகோ உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்தம் 46 மில்லியன் வெளிநாட்டினர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இது மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 14% ஆகும். மேலும், அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர்களில் 53% அதாவது 24.5 மில்லியன் பேர் அமெரிக்க குடிமகன்களாக உரிமை பெற்றுள்ளனர். நேச்சுரலைஸ்ட் சிட்டிசன் எனப்படும் உரிமையை பெற்று அமெரிக்க குடிமகன்களாக மாறி உள்ளனர். இவ்வாறு அமெரிக்க குடிமகன்களாக மாறியவர்களில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அடுத்ததாக இந்தியா உள்ளது. தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், கியூபா, டொமினிக் ரிபப்ளிக் நாடுகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 65960 இந்தியர்கள் அமெரிக்க குடிமகன்களாக மாறி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu