உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா உயர்வு – 15.5% பங்கு பெற்றுள்ளது

September 1, 2025

அமெரிக்கா விதித்த வரி சுமைகளின் பின்னணியிலும், இந்தியா உக்ரைனுக்கான முக்கிய டீசல் ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதனிடையே, உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5 சதவீதம் என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனம் NaftoRynok தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி முதல் ஜூலை […]

அமெரிக்கா விதித்த வரி சுமைகளின் பின்னணியிலும், இந்தியா உக்ரைனுக்கான முக்கிய டீசல் ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதனிடையே, உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5 சதவீதம் என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனம் NaftoRynok தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்தியாவின் பங்கு 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதம் மட்டுமே இருந்த இந்தியாவின் பங்கு, தற்போது பன்மடங்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனால், இந்தியா உலக எரிசக்தி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu