வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடியும் - அமைச்சர் நிதின் கட்கரி 

March 25, 2023

வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடியும் என்று அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மின்சார பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும். ஆண்டுதோறும் நாம் 1,200 டன் லித்தியத்தை இறக்குமதி செய்கிறோம். தற்போது, காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் […]

வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடியும் என்று அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மின்சார பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும். ஆண்டுதோறும் நாம் 1,200 டன் லித்தியத்தை இறக்குமதி செய்கிறோம். தற்போது, காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்புக்கு லித்தியம் மிக முக்கியமானது. எனவே வாகன உற்பத்தி துறையில் இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியும்.

மேலும் தற்போது இந்திய வாகன தொழிலின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வருவாயில் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு மிக அதிகம் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu