இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், கடந்த காலாண்டில் 90.73 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் புதிய ஆலை அமைப்பதற்கான முதலீடுகளை விற்றதால், 294 கோடி லாபம் ஈட்டப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது .
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 3 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 1108 கோடியிலிருந்து 1219 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்திடம் உள்ள மொத்த கிளிங்கர் மற்றும் சிமெண்ட் 21.82 லட்சம் டன் அளவில் உள்ளது.
இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என் ஸ்ரீனிவாசன், “கடந்த காலாண்டில், எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததால், நிறுவனத்தின் செயல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, செலவுகளை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சிமெண்ட் விலையை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது” என்று கூறினார்.