பாரத் கொண்டை கடலை மற்றும் மசூர் பருப்பு விற்பனை தொடக்கம்

October 24, 2024

பருப்பு வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு 'பாரத்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கொண்டைக் கடலை மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் மானிய விலை விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூர் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்கப்படுகிறது. முதல்கட்டமாக தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் […]

பருப்பு வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு 'பாரத்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கொண்டைக் கடலை மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் மானிய விலை விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூர் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்கப்படுகிறது. முதல்கட்டமாக தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களுக்கு 3 லட்சம் டன் கொண்டைக் கடலை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu