இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவை மறுபடியும் தொடங்குகிறது.
இந்தியா மற்றும் சீனா இடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க ரீதியான உறவு 75வது ஆண்டை நிறைவேற்றும் போது செயல்படுத்தப்பட உள்ளது.
2020 ஆம் ஆண்டிலிருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது. தற்போது, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீனா வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த நேரடி விமான சேவையை தொடங்க ஒப்புக் கொண்டுள்ளனர்.