இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம், கடந்த 2022 ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மதிப்பு 135.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், முதல் முறையாக, 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வர்த்தக பற்றாக்குறை பதிவாகியுள்ளது. இந்த தகவல்கள், சீனாவின் கஸ்டம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு வருடாந்திர அடிப்படையில் 21.7% அதிகரித்து, 118.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 17.48 பில்லியன் ஆக பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 37.9% சரிவாகும். இதை, கடந்த 2021ம் ஆண்டின் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 101.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைவாகும். இந்தியாவை பொறுத்தவரை,100 பில்லியனைத் தாண்டி வர்த்தக பற்றாக்குறை பதிவானது இதுவே முதல் முறை என்பதால், இந்தியா இதனை கவனமாக கையாள திட்டமிட்டுள்ளது.