எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

April 24, 2023

எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இதுவரை, இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன. தற்போது, போர்க்கப்பலில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஓடிஸா கடற்கரையில் நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டது. டிஆர்டிஓ உருவாக்கிய இந்த ஏவுகணை, நடுவானில் குறிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக சொல்லப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளின் கடற்படையில் மட்டுமே இந்த வகை ஏவுகணைகள் […]

எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இதுவரை, இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன. தற்போது, போர்க்கப்பலில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஓடிஸா கடற்கரையில் நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டது. டிஆர்டிஓ உருவாக்கிய இந்த ஏவுகணை, நடுவானில் குறிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக சொல்லப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளின் கடற்படையில் மட்டுமே இந்த வகை ஏவுகணைகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஏவுகணை தயாரிப்பில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்துள்ளதாக கூறியுள்ளார். ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு டிஆர்டிஓ தலைவர் சமிர் இ. காமத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu