சர்வதேச ஜிடிபியில் இந்தியாவுக்கு 15% பங்களிப்பு - சர்வதேச நாணய நிதியம்

September 11, 2023

உலகின் மொத்த ஜிடிபி அளவில், இந்தியா மட்டுமே 15% பங்களிப்பை கொண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உள்ளது என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மிகுந்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். தற்போதைய நிலையில், உலகின் 3வது பெரிய பொருளாதாரம் ஆக இந்தியா உருவானாலும், அதற்கான தீவிர முன்னெடுப்புகளை […]

உலகின் மொத்த ஜிடிபி அளவில், இந்தியா மட்டுமே 15% பங்களிப்பை கொண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உள்ளது என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மிகுந்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். தற்போதைய நிலையில், உலகின் 3வது பெரிய பொருளாதாரம் ஆக இந்தியா உருவானாலும், அதற்கான தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் 2024 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6% அளவில் இருக்கும் என கணித்துள்ளார். மேலும், இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கும் வகையில் முன்னேற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். அத்துடன், கிரிப்டோகரன்சி தொடர்பாக இந்தியா முன்னெடுத்து வரும் ஒழுங்கு முறைகளை மிகவும் முக்கியமான நடவடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். சீனாவைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்டாலும், அதை சீர் செய்வதற்கான திட்டங்களில் அந்நாடு பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu