சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி 5% குறைப்பு

June 15, 2023

சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான இறக்குமதி வரியை, இந்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 17.5% ஆக இருந்த இறக்குமதி சுங்க கட்டணம், தற்போது 12.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய நுகர்வோருக்கு, எளிதாக எண்ணெய் கிடைக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 அக்டோபரில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரிகள் […]

சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான இறக்குமதி வரியை, இந்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 17.5% ஆக இருந்த இறக்குமதி சுங்க கட்டணம், தற்போது 12.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய நுகர்வோருக்கு, எளிதாக எண்ணெய் கிடைக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 அக்டோபரில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இந்தியச் சந்தை நிலவரங்களில் மாற்றம் இருக்காது எனவும், இறக்குமதி அதிகரிக்காது எனவும் கூறப்படுகிறது. அதே வேளையில், இந்தியாவின் 60% சமையல் எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu