இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரியும் - உலக வங்கி கணிப்பு

June 7, 2023

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரியும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது உலக வங்கியின் முந்தைய கணிப்பை விட 0.3% குறைவாகும். நேற்று, சர்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள்: “சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3.1% ல் இருந்து 2.1% ஆக சரிய வாய்ப்புள்ளது. சீனா தவிர்த்து பிற […]

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரியும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது உலக வங்கியின் முந்தைய கணிப்பை விட 0.3% குறைவாகும். நேற்று, சர்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள்: “சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3.1% ல் இருந்து 2.1% ஆக சரிய வாய்ப்புள்ளது. சீனா தவிர்த்து பிற வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4.1% ல் இருந்து 2.9% ஆக சரிய வாய்ப்புள்ளது. அதே வேளையில், இவை வெறும் முன் கணிப்புகளே. இவற்றை முடிவாக கருதக்கூடாது. உலக நாடுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வாய்ப்புகளை உருவாக்கி முன்னேற முடியும்.” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu