கியூபா நாட்டுக்கு 90 டன் மருத்துவ பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது.
கியூபாவுக்கு 90 டன் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. தீவு நாடுகளுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் இது அனுப்பப்படுகிறது. கியூபாவில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இந்தியா மனிதாபிமான உதவி செய்கிறது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 90 டன் மருத்துவ பொருட்களை முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஞாயிறு அன்று கியூபாவுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. இந்த மருத்துவ பொருட்களை கொண்டு மருந்து உற்பத்தியாளர்கள் முக்கிய நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருந்து கரைசல் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். மேலும் நாள்பட்ட தொற்று நோய்க்கு இது பயன்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கை கூறப்பட்டுள்ளது.