இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 55% சரிவு

December 7, 2022

நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில், இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் பாதி அளவுக்கும் கீழ் குறைந்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்ட் ஸ்டீல் ஏற்றுமதி 55% குறைந்து, 4.3 மில்லியன் டன்களாக உள்ளது. சர்வதேச அளவில் தேவை குறைந்ததாலும், குறிப்பிட்ட சில ஸ்டீல் பொருட்களுக்கு இந்தியா ஏற்றுமதி வரி விதித்ததாலும் இவ்வாறு நேர்ந்ததாக கருதப்படுகிறது. இதே காலகட்டத்தில், இந்தியா, 3.8 மில்லியன் டன் அளவில் […]

நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில், இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் பாதி அளவுக்கும் கீழ் குறைந்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பினிஷ்ட் ஸ்டீல் ஏற்றுமதி 55% குறைந்து, 4.3 மில்லியன் டன்களாக உள்ளது. சர்வதேச அளவில் தேவை குறைந்ததாலும், குறிப்பிட்ட சில ஸ்டீல் பொருட்களுக்கு இந்தியா ஏற்றுமதி வரி விதித்ததாலும் இவ்வாறு நேர்ந்ததாக கருதப்படுகிறது.

இதே காலகட்டத்தில், இந்தியா, 3.8 மில்லியன் டன் அளவில் பினிஷ்ட் ஸ்டீல் இறக்குமதி செய்தது தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22.5% அதிகமாகும். அதே வேளையில், க்ரூட் ஸ்டீல் உற்பத்தி 5.6% உயர்ந்து, 81.9 மில்லியன் டன்களாக உள்ளது. அத்துடன், பினிஷ் ஸ்டீல் உற்பத்தி 6.4% உயர்ந்து 77.7 மில்லியன் டன்களாக உள்ளது. ஸ்டீல் நுகர்வு 12% உயர்ந்து 75.3 மில்லியன் டன்களாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu