வாகன கண்காட்சி 2023 - இந்தியாவின் முதல் சூரிய சக்தி கார் அறிமுகம்

January 14, 2023

நொய்டாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், இந்தியாவின் முதல் சூரிய எரிசக்தி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஈவா’ என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன புத்தாக்க நிறுவனமான ‘வாய்வே மொபிலிட்டி’ இந்த காரை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை (2+1) என மூன்று பேர் அமரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை கதவுடன் உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி கார், கிட்டத்தட்ட டாடா […]

நொய்டாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், இந்தியாவின் முதல் சூரிய எரிசக்தி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஈவா’ என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன புத்தாக்க நிறுவனமான ‘வாய்வே மொபிலிட்டி’ இந்த காரை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை (2+1) என மூன்று பேர் அமரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றை கதவுடன் உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி கார், கிட்டத்தட்ட டாடா நானோவின் வடிவத்தை ஓத்ததாக உள்ளது. காரின் மேற்கூறையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுதும் சூரிய எரிசக்தியை உருவாக்க முடியும். இதற்கான பிரத்யேக சோலார் கூறை தனியாக விற்கப்படுகிறது. இந்த மின்சார கார் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், வரும் 2024 ஆம் ஆண்டு சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரை இயக்க 14 KWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை சார்ஜ் செய்ய 15 ஆம்பியர் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu