இந்தியா, இலங்கைக்கு உதவி செய்யும் வகையில், அந்நாட்டு காவல்துறைக்கு 125 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி ரக வாகனங்களை வழங்கியுள்ளது. இதனை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் பதிவில், “இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும். காவல்துறை ரோந்து பயன்பாட்டிற்காக 125 வாகனங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தியா சார்பாக தூதர் கோபால் பாக்ளே, இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் திறன் அலஸ் இடம் வாகனங்களை ஒப்படைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட தொடக்கத்தில், இந்தியா, இலங்கைக்கு 500 வாகனங்களை தருவதாக கூறியிருந்தது. அதில், முதற்கட்டமாக 125 வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதமுள்ள 375 வாகனங்களும் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.