இலங்கையின் 3 தீவுகளில் செயல்படுத்தப்படும் ‘ஹைபிரிட்’ மின் திட்டங்களுக்கு ரூ. 92 கோடியை இந்தியா வழங்கியது.
இந்தியாவின் மானிய உதவியின் கீழ் இலங்கையின் 3 தீவுகளில் செயல்படுத்தப்படும் ‘ஹைபிரிட்’ மின் திட்டங்களுக்கு ரூ. 92 கோடியை இந்தியா நேற்று வழங்கியது. கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் டெலிபிட், நயினாதீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய தீவுகளில் இந்த ‘ஹைபிரிட்’ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக ரூ. 92 கோடியை இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்ஷன ஜயவாதனா மற்றும் இலங்கை எரிசக்தி ஆணைய தலைவர் ரஞ்சித் சேபாலா அவர்களுக்கு இந்திய தூதர் சந்தோஷ் ஜா வழங்கினார். இத்திட்டங்கள் 2025-ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு , ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.