விவோ நிறுவனத்தின் 27000 கைப்பேசிகளை, ஒரு வார காலத்திற்கும் மேலாக, டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள விவோ கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய நிதி அமைச்சகம் மற்றும் விவோ நிறுவனம், இது குறித்த நேரடி தகவல்களை வெளியிட மறுத்துவிட்டன.
இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களின் நிதி மோசடி அதிகரித்து வருவதால், இந்திய அரசு, சீன நிறுவனங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவுடனான மோதலின் அடுத்த கட்டமாக, இவ்வாறான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக, விவோ கைபேசிகளின் ஏற்றுமதி முடக்கம் உள்ளதாக கருதப்படுகிறது.