சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை ஆறு தங்கப்பதக்கம் உள்ளிட்ட 17 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சே நகரில் பாரா ஆசிய போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 33 வீரர்கள் கலந்துள்ளனர். இதன் முதல் நாள் முடிவில் இந்தியா ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த 17 பதக்கங்களில் 11 பதக்கங்கள் ட்ராக் அண்ட் ஃபீல்ட் பிரிவுகளில் இருந்து கிடைத்துள்ளது. பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், ஈரான் இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.