ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 11 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி 2023 நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கிச் சூடு ஆண்கள் பிரிவு,மகளிர் கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் இந்திய அணிகள் தங்கம் வென்றுள்ளது. அதை போல் துடுப்புப்படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தோமர் ஒரு வெண்கலமும், இந்திய ஆண்கள் அணி ஒரு வெண்கலமும் என மொத்தம் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. இந்திய மொத்தம் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலம் என 11 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.














