ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ராணுவ நடவடிக்கைகளுக்கு அதிகமாக செலவிடும் நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், ராணுவ நடவடிக்கைகளுக்காக 6.9 லட்சம் கோடி ரூபாய் தொகையை இந்தியா செலவிட்டுள்ளது. அதன்படி, பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 76 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, சீனா - 24 லட்சம் கோடி, ரஷ்யா - 9 லட்சம் கோடி செலவிட்டு 2 மற்றும் 3 ஆகிய இடங்களை முறையே பிடித்துள்ளன. சுமார் 6.3 லட்சம் கோடி ரூபாய் ராணுவ செலவினங்களை பதிவு செய்து, சவுதி அரேபியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில், பிரிட்டன், ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.