உலக டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னிலை

October 31, 2023

இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது. அதில் யு.பி. ஐ முறையில் 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், ஐந்து கோடிக்கு அதிகமான வணிகர்களும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் யூ.பி. ஐ முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு தரவுகளின் படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதல் பட்டியலில் இந்தியா உள்ளது. […]

இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது. அதில் யு.பி. ஐ முறையில் 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், ஐந்து கோடிக்கு அதிகமான வணிகர்களும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் யூ.பி. ஐ முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு தரவுகளின் படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதல் பட்டியலில் இந்தியா உள்ளது. அடுத்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் அளவை தாண்டி உள்ளது. டிஜிட்டல் எதிர்காலத்தில் யூபிஐ முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக 30க்கும் நாட்கள் மேற்பட்ட நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பிரான்ஸ்,ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளிலும் இவை இணைந்துள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சேவைகள் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu