ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது - பிரதமர் மோடி 

March 30, 2023

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருப்பதாக ஜனநாயக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென் கொரியா நடத்தியது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லஸ், ஜாம்பியா அதிபர் ஹகைன்டி, நெதர்லாந்து பிரதமர் மார் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதில் ‘ஜனநாயகம் வழங்கும் பொருளாதார […]

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருப்பதாக ஜனநாயக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென் கொரியா நடத்தியது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோப்லஸ், ஜாம்பியா அதிபர் ஹகைன்டி, நெதர்லாந்து பிரதமர் மார் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். இதில் ‘ஜனநாயகம் வழங்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட வளம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பண்டைய இந்தியாவில் குடியரசு மாநிலங்கள் இருந்ததற்கான பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. இந்தியா உண்மையிலேயே ஜனநாகத்தின் தாய்.

ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது ஒரு உணர்வு. அது ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் ஆசைகளும் சமஅளவில் முக்கியமானது என்பதை அடிப்படையாக கொண்டது. அதனால்தான் இந்தியாவில், ‘அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி’ என்பது எங்களின் வழிகாட்டி தத்துவமாக உள்ளது என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu