தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு - உலக சுகாதார நிறுவனம் 

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 18,130 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு […]

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 18,130 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.3 புதிய தொற்றுகள் என்ற விகிதாச்சாரத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் 7 நாடுகளில் கரோனா தொற்று 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள XBB.1.5 திரிபை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu