இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது. இதற்கிடையே இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்தியக் கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ரேடார் கண்காணித்து இந்த வசதிகளில் எரிபொருள் நிரப்பும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.