கைபேசிகளின் இணைய வேகம் - உலக அளவில் 10 இடங்கள் முன்னேறிய இந்தியா

February 20, 2023

இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் படிப்படியாக அறிமுகமாகி வரும் தற்போதைய சூழலில், கைபேசிகளுக்கான இணைய வேகத்தில் இந்தியா முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓக்லா நிறுவனத்தின் அறிக்கை படி, டிசம்பர் மாதத்தில் 79 ஆம் இடத்தில் இருந்த இந்தியா, ஜனவரி மாதத்தில் 69 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே வேளையில், பிராட் பேண்ட் இணைப்புகளுக்கான வேகத்தை பொறுத்தவரை, 81-ஆம் இடத்திலிருந்து, 79 ஆம் இடத்திற்கு, இந்தியா முன்னேறி உள்ளது. மேலும், 49.14 இல் இருந்து […]

இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் படிப்படியாக அறிமுகமாகி வரும் தற்போதைய சூழலில், கைபேசிகளுக்கான இணைய வேகத்தில் இந்தியா முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓக்லா நிறுவனத்தின் அறிக்கை படி, டிசம்பர் மாதத்தில் 79 ஆம் இடத்தில் இருந்த இந்தியா, ஜனவரி மாதத்தில் 69 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே வேளையில், பிராட் பேண்ட் இணைப்புகளுக்கான வேகத்தை பொறுத்தவரை, 81-ஆம் இடத்திலிருந்து, 79 ஆம் இடத்திற்கு, இந்தியா முன்னேறி உள்ளது. மேலும், 49.14 இல் இருந்து 50.02 எம்பிபிஎஸ் ஆக தரவிறக்க வேகம் அதிகரித்துள்ளது.

ஓக்லா நிறுவனம், தொலைத்தொடர்பு இணைப்புகள் தொடர்பான ஒப்பீட்டாய்வுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிறுவனத்தின் பட்டியலில், அதிக வேகமுள்ள இணைய சேவை கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. மேலும், அதிக முன்னேற்றத்தை பதிவு செய்த நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. இது தனது முந்தைய இடத்திலிருந்து 24 இடங்கள் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பிராட் பேண்ட் தரவிறக்கங்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தப் பிரிவில் அதிகம் முன்னேற்றத்தை பதிவு செய்த நாடாக, 20 இடங்கள் முன்னேறிய சைப்ரஸ் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu