சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணய குறியீட்டில் பின்தங்கிய இந்தியா

February 28, 2023

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணய குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஐநா சபை நிலையான வளர்ச்சி இலக்குக்கான பட்டியலில் மொத்தம் 33 குறியீடுகள் உள்ளன. அதில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணயம் தொடர்பான குறியீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அடிப்படை வசதிகளுக்கான அணுகல், வறுமை ஒழிப்பு, வயிற்று போக்கு, குழந்தைகள் திருமணம், புகையிலை பயன்பாடு, நவீன கருத்தடைகள் பயன்பாடு போன்ற முக்கிய குறியீடுகளில் இந்தியாவில் உள்ள 75 சதவீத மாவட்டங்கள் குறிப்பிட்ட இலக்கை விட மிகவும் […]

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணய குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.

ஐநா சபை நிலையான வளர்ச்சி இலக்குக்கான பட்டியலில் மொத்தம் 33 குறியீடுகள் உள்ளன. அதில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணயம் தொடர்பான குறியீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அடிப்படை வசதிகளுக்கான அணுகல், வறுமை ஒழிப்பு, வயிற்று போக்கு, குழந்தைகள் திருமணம், புகையிலை பயன்பாடு, நவீன கருத்தடைகள் பயன்பாடு போன்ற முக்கிய குறியீடுகளில் இந்தியாவில் உள்ள 75 சதவீத மாவட்டங்கள் குறிப்பிட்ட இலக்கை விட மிகவும் பின்தங்கி உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் பெரும்பாலும் மத்திய பிரதேசம்,சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒடிசாவில் உள்ளன.

மொத்தம் உள்ள 33 குறியீடுகளில் 19 விஷயங்களில் இந்தியா இன்னும் தனது இலக்கை அடையவில்லை. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2030ம் ஆண்டுக்குள் கூட இந்த இலக்கை அடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu