இந்தியாவின் சராசரி தனிநபர் மாத சம்பளம் 50000 க்கும் கீழ் பதிவு

இந்தியாவில், தனிநபர் ஒருவரின் சராசரி மாத சம்பளம் 573 டாலர்களாக பதிவாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 46916 ரூபாய் ஆகும். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, உலகளாவிய புள்ளியியல் அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், அனைத்து உலக நாடுகளின் தனிநபர் சராசரி மாத சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, லுக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கத்தார், ஐக்கிய அரபு […]

இந்தியாவில், தனிநபர் ஒருவரின் சராசரி மாத சம்பளம் 573 டாலர்களாக பதிவாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 46916 ரூபாய் ஆகும். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, உலகளாவிய புள்ளியியல் அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அத்துடன், அனைத்து உலக நாடுகளின் தனிநபர் சராசரி மாத சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, லுக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. சீனா 44 வது இடத்தில் உள்ளது. சீனாவின் சராசரி மாத சம்பளம் இந்திய மதிப்பில் 87528 ரூபாயாக உள்ளது. இந்த பட்டியலில், 52812 ரூபாய் தனிநபர் வருமான பதிவுடன், ரஷ்யா 59 வது இடத்தில் உள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 65 வது இடத்தை பிடித்துள்ளது. 11872 ரூபாய் தனிநபர் மாத சம்பளத்துடன், பாகிஸ்தான் 104வது இடத்தை பிடித்துள்ளது. பிரேசில், துருக்கி, அர்ஜென்டினா, இந்தோனேசியா, கொலம்பியா, வெனிசுலா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவை விட குறைந்த தனிநபர் மாத சம்பளத்தை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu