சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

January 27, 2023

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'சிந்து நதிநீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களுடன் மூன்றாவது சாட்சியாக உலக வங்கி இதில் கையெழுத்திட்டது. இதன்படி சிந்து நதியும், அதன் துணை நதிகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டது. கிழக்கு […]

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'சிந்து நதிநீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களுடன் மூன்றாவது சாட்சியாக உலக வங்கி இதில் கையெழுத்திட்டது. இதன்படி சிந்து நதியும், அதன் துணை நதிகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டது. கிழக்கு பகுதி நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கு பகுதி நதிகளின் நீரை பாகிஸ்தானும் முழுமையாக பயன்படுத்த உரிமை வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகளை பரிமாறி கொள்ளவும், ஒத்துழைக்கவும் 'சிந்து ஆணையம்' அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இரு நாடுகள் சார்பிலும் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கடந்த ஜனவரி 25ந்தேதி அந்தந்த ஆணையர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu