இந்தியாவின் ஹெச்.எஸ் பிரணாய் இந்திய ஓபன் பேட்மிட்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
டெல்லியில் இந்தியா ஓபன் பேட்மிட்டன் தொடரில் ஆடவர் ஒற்றைப் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் ஹெச்.எஸ் பிரணாய் ப்ரியன்ஷு ரஜ்வத்துடன் மோதினார். இதில் 20-22, 21- 14, 21 - 16 என்ற நேர் செட் கணக்கில் ஹெச்.எஸ் பிரணாய் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 16 நிமிடங்களாக நீடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இவர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.