உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய விராட் கோலி 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி 398 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்குகிறது.