மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் மதிப்பீடுகளின்படி 2022 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 141.7 கோடியாக இருந்தது. உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜன.,18 வரை இந்தியாவின் மக்கள் தொகை ஏற்கனவே 142.3 கோடியாக உயர்ந்துள்ளது. ஆராய்ச்சி தளமான மேக்ரோடிரெண்ட்ஸின் மற்றொரு மதிப்பீட்டின்படி இந்தியாவின் சமீபத்திய எண்ணிக்கை 142.8 கோடியாக உள்ளது.
இந்தியா இப்போது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், குறைந்தபட்சம் 2050 வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என உலக மக்கள் தொகை கணக்கீடு அமைப்பு எதிர்பார்க்கிறது. மறுபுறம் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பில் சிறிய சரிவு காணப்படுகிறது.