பிரதான் மந்திரி இ பஸ் சேவா திட்டத்தின் கீழ் 10000 மின்சார பேருந்துகள் தொடங்கப்பட உள்ளன

September 21, 2023

பிரதான் மந்திரி இ பஸ் சேவா திட்டத்தின் கீழ் 10000 மின்சார பேருந்துகள் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மின்சாரப் பேருந்துகளை கூட்டான்மையில் இணைந்து தயாரித்துள்ளன. நாடு தழுவிய முறையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ஆம் தேதி இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. அதன்படி, 57613 […]

பிரதான் மந்திரி இ பஸ் சேவா திட்டத்தின் கீழ் 10000 மின்சார பேருந்துகள் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மின்சாரப் பேருந்துகளை கூட்டான்மையில் இணைந்து தயாரித்துள்ளன. நாடு தழுவிய முறையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ஆம் தேதி இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. அதன்படி, 57613 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில், ஆவடி, அம்பத்தூர், கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 11 நகரங்கள் மின்சாரப் பேருந்து சேவையை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu