ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி

மியான்மரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி 1-0 என்ற கணக்கில் மியான்மரைத் தோற்கடித்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2026 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில் மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகளுடன் போட்டியிட்டது. இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக 0-0 என்ற சமனில் முடித்தது, இரண்டாவது […]

மியான்மரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி 1-0 என்ற கணக்கில் மியான்மரைத் தோற்கடித்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

2026 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில் மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகளுடன் போட்டியிட்டது. இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக 0-0 என்ற சமனில் முடித்தது, இரண்டாவது ஆட்டத்தில் துர்க்மெனிஸ்தானை 7-0 என அபார வெற்றி பெற்றது. கடைசி ஆட்டத்தில் மியான்மரை 1-0 என தோற்கடித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 2006 இல் இறுதியாக இந்த போட்டியில் விளையாடியபின் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu