உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 46 வது இடம் - பிரதமர் நரேந்திர மோடி

September 10, 2022

குஜராத் மாநிலத்தில் மத்திய மாநில அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இன்றைய மாநாட்டு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015 ஆம் ஆண்டில், 81ம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகக் கூறினார். அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற சுகாதாரம், தண்ணீர் குறித்த அறிவியல் மாநாட்டு அமர்வுகளுக்குப் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அறிவியல் அடிப்படையிலான […]

குஜராத் மாநிலத்தில் மத்திய மாநில அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இன்றைய மாநாட்டு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015 ஆம் ஆண்டில், 81ம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகக் கூறினார்.

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற சுகாதாரம், தண்ணீர் குறித்த அறிவியல் மாநாட்டு அமர்வுகளுக்குப் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்குச் சான்றாக, இந்த அறிவியல் மாநாடு, அனைவரின் முயற்சியுடன் நடைபெற்று வருகிறது. இன்றைய நிலையில், இந்தியா நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் ஈடுபடும் மக்கள் இதில் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். அவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாடும் போது அறிவியல் நமது கலாச்சாரத்தின் அங்கமாக மாறும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மாநிலத்தின் சிறந்த அறிவியல் நடைமுறைகள் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அறிவியல் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடையும்” என்றார். மேலும், இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu