ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

March 24, 2023

ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு நுண்ணறிவு நிறுவனமான சைவால் (SciVal) தெரிவித்துள்ளது. கல்வித் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் சீனா 45 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (44 லட்சம்) 2-ம் இடத்திலும், பிரிட்டன் (14 லட்சம்) 3-ம் இடத்திலும், […]

ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு நுண்ணறிவு நிறுவனமான சைவால் (SciVal) தெரிவித்துள்ளது. கல்வித் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் சீனா 45 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (44 லட்சம்) 2-ம் இடத்திலும், பிரிட்டன் (14 லட்சம்) 3-ம் இடத்திலும், இந்தியா (13 லட்சம்) 4-ம் இடத்திலும் உள்ளன.

இதே வேகத்தில் சென்றால் பல்துறை ஆராய்ச்சி வெளியீடுகளில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 3-ம் இடத்தைப் பிடித்துவிடும். இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 52.6% பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu