உலக நாடுகளின் நிலையான வளர்ச்சி முன்னேற்றங்களை ஆய்விட்டு ஐ.நா. ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலில், இந்தியா முதல்முறையாக முதல் 100 நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளது. இது வளர்ச்சி பாதையில் முன்னேற்றத்தை சுட்டிகாட்டுகிறது.
167 நாடுகள் அடங்கிய பட்டியலில், இந்தியா 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 109-வது இடத்தில் இருந்தது. சீனா 49-வது இடத்தில், அமெரிக்கா 44-வது இடத்தில் உள்ளன. பின்லாந்து, சுவீடன், டென்மார்க் நாடுகள் முதல்மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. பருவநிலை, பல்லுயிர் பெருக்கம், அடிப்படை சேவைகள், ஊழல் குறியீட்டு அளவுகள் உள்ளிட்ட 17 இலக்குகளின் அடிப்படையில் நாடுகளுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் நாடுகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.














